ஞானஸ்நான ஆராதனை Jeffersonville, IN USA 50-0409 1அப்போஸ்தலர்களின் இருதயங்களில் ஜீவித்து அந்த குருடனின் கண்களைத் திறந்த..?.. அவர்கள் இரட்சிக்கப் பட்டிருக்க வேண்டும். மேலும் விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான். இந்த அடையாளங்கள் விசுவாசிக்கிறவர் களைப் பின்தொடரும். என் நாமத்தினால் பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்களையோ அல்லது சாவுக்கேதுவான யாதொன்றை எடுத்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது. (ஒலி நாடாவில் காலியிடம் ஆசிரியர்) இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து, தம்முடைய சபையை உற்றுநோக்கி கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் உங்களில் இருப்பதை நீங்கள் அறிக்கையிட்டால், அவர் தம்முடைய வல்லமையோடும் தம்முடைய மகிமை யோடும் வரும்போதும் பிதாவுக்கு முன்பாக அவர் அறிக்கைபண்ணுவார். அவருடைய சீஷர்கள் புறப்பட்டுப் போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனே கூடக் கிரியை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிபடுத்தினார். பரிசுத்த மாற்கு 16. அவர் எவ்வளவு அற்புதமானவர்! அவர் எவ்வளவு மகிமையானவர்! ஞானஸ்நானத்திற்கான இந்த வேளையை விட மிகவும் மகத்தான தருணம் இந்த உலகத்திலேயே கிடையாது. சரியாக அங்கேயே அப்படியே தரித்திருங்கள்.... பையன்கள் கொஞ்ச நேரத்தில் வெளியே இருப்பார்கள்.... கலந்து கொள்பவர்கள் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் சத்தத்தைக் கேட்டிருக்கிறார்கள். அங்கே ஒரு ஸ்திரீ அவளுடைய தலையின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள்... ரிச்மண்ட் அவர்களைக் கொண்டு செல்ல பொருள் உதவி வருவதைக் கண்டேன். அவள் வெளிநாட்டை சேர்ந்த ஒருத்தி. அவள், - கர்த்தருடைய வருகையின் மகிமையை என் கண்கள் கண்டன“ என்றாள். ஏதோவொரு நாளில் அவர் வருவார். நம்முடைய எல்லா துக்கமும் அப்போது முடிந்துவிடும். உயிர்த்தெழுதலின் நாளாகிய இது ஒரு அற்புதமான நாள். உங்களில் யாராவது அங்கிருப்பீர்களானால்... (ஒலிநாடாவில் காலியிடம் ஆசிரியர்). அவர்... கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்புவிடம், - நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள்'' என்று சொன்னார். இங்கே எத்தியோப்பியருடையா ராஜ ஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனு மாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒரு மந்திரி இருந்தான், அவன் ஏசாயா 40-ம் அதிகாரத்திலுள்ள வசனங்களை வாசித்துக் கொண்டிருந்தான். (ஏசாயா 53-ம் அதிகாரம் - தமிழாக்கியோன்) - அடிக்கப்படும்படி கொண்டு போகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியை போலவும், தன்னை மயிர்கத்தரிக் கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங் களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.'' பிலிப்பு அவனிடம், நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா?“ என்றான். 2அதற்கு அவன் ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லி, பிலிப்பு ஏறி, தன்னோடே உட்காரும்படி அவனை வேண்டிக்கொண்டான்.. பிலிப்பு அந்த இரதத்தில் ஏறி; அந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும் அவருடைய வல்லமையையும் குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான். கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்று நான் விசவாசிக்கிறேன், நீங்கள் விசுவாசிக்கவில்லையா? மந்திரி அந்த செய்தியை கேட்ட உடனே இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான். அதற்கு பிலிப்பு, - நீர் உம்முடைய முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் விசுவாசித்தால், தடையில்லை '' என்றான். 3மந்திரி , - இயேசு கிறிஸ்துவே தேவனுடைய குமாரன் என்று என் முழு மனதோடும் நான் விசுவாசிக்கிறேன்'' என்றான். அவன் இரதத்தை நிறுத்தினான். அது செய்யப்பட்டது. அவர் தேவனுடைய குமாரன் என்று நீங்கள் உண்மையாகவே உங்கள் இருதயத்தில் விசவாசிக்கும்போது, விசுவாசிக்கிறவன் ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்படுவதில்லை. அவன் அந்த இரதத்தை நிறுத்தினான். பிலிப்பும் மந்திரியும் தண்ணீருக்குள் சென்றார்கள். பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததன் மூலம் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்கு கீழ்ப்படிந்தான். அவன் ஞானஸ்நானம் கொடுத்த பின்பு, கர்த்தருடைய ஆவியானவர் அவனைக் கொண்டு போய்விட்டார். அவர்கள் அதற்கு மேல் அவனைக் காணவில்லை; அவன் இருநூறு மைல்களுக்கு அப்பால் இருந்தான்... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்) மரித்துக்கொண்டிருக்கும் ஒருவருக்கு. இப்பொழுது இரட்சிக்கப்பட்டு ஆவியால் நிரம்பியிருக்கின்றனர். அவர்களெல்லாரும் சத்தமிட்டுக் கொண்டு தொடர்ந்து அலறி கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். பரிசுத்த ஆவியானவர் விழுந்து கொண்டிருந்தார். மனந்திரும்புதலுக்கு பிற்பாடு அடுத்ததாக செய்யவேண்டிய காரியம் ஞானஸ்நானமே. அப்போஸ்தலர் 2-ம் அதிகாரம் 37-ம் வசனம்: இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரைப் பார்த்து : சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள். பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயி ருக்கிறது என்றான். பரலோக பிதாவே, இந்த வேதவாக்கியம் 1900 வருஷங்களுக்கு முன்பே எழுதப்பட்டது, தம்முடைய வாக்குத்தத்தமானது இன்னும் புதிதாகவே உள்ளது. மேலும் இப்பொழுது, கர்த்தாவே, இங்கே இந்த வாலிப ஜனங்கள் உள்ளனர், இங்கே என் வலதுபக்கத்தில் நின்று கொண்டிருக்கும் இந்த இரண்டு வாலிப ஸ்திரீகள் உம்மை தங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டுள்ளனர்; அவர்கள் சுவிசேஷ விவரணத்தை விசுவாசிக்கின்றனர். 4கர்த்தாவே, என் இடது பக்கத்தில் என் சிறிய மருமகன் மெல்வினும் என் சொந்த பையனும் இருக்கின்றனர். ஓ, தேவனே, கூடுமானால் இந்தக் காலையில் அவ்விரு தாய்மார்களும் அழைக்கப்பட்டு அந்த படிக்கட்டின் பக்கத்திலுள்ள கைப்பிடி கம்பியினூடாக நோக்கி, இப்பொழுது இங்கேயுள்ள தங்களுடைய பையன்களை கீழே நோக்கிப்பார்த்து காணும்படி அனுமதிப்பீராக... ஓ, கர்த்தாவே, நான் எவ்வளவாக மகிழ்ச்சியடைகிறேன்! ஓ, நீர் - நீர் ஜெபத்திற்கு பதிலளிக்கிறீர் என்பதை அறிவதென்பது அந்த சிறு ஏழை தமிழாக்கியோன்) போய் விட்டாள், ஆனால் அவளுடைய ஜெபத்திற்கு இப்போது பதிலளிக்கப்பட்டுவிட்டது. அவன் உம்மை நேசித்து உம்மை சேவிக்க வேண்டுமென்று அவள் ஜெபித்தாள். அவன் இந்தக் காலையில் தன்னுடைய நிலையில் நிலைத்திருக்கிறான். கர்த்தாவே, இங்கேயுள்ள மற்றவர்களும் தங்களுடைய தாய்மார்கள் போனவர்களாக காணப்படலாம், எங்களுக்குத் தெரியாது; என்னவாயினும் நீர் ஜெபத்திற்குப் பதிலளிக்கிறீர். அன்புள்ள பிதாவே, இப்பொழுது நான் உம்முடைய தாழ்மையான ஊழியனாக, சுவிசேஷத்தின் ஒரு ஊழியக்காரனாக, ஒரு ஆசாரியனாக என் கடமையை செய்யும்படி முன்னோக்கி நடத்தி செல்கிறேன். தேவனே, இரக்கமாயிரும். நான் அவர்களை தண்ணீரில் ஞானஸ்நானம் பண்ணும்போது, பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய இருதயத்திற்குள் கிறிஸ்துவை முத்திரை யிடுவாராக. அவர்கள் தண்ணீரை விட்டு வெளியே வருவது, நீர் ஈஸ்டர் காலையில் எழுந்தது போலிருக்கட்டும், இந்த கடுங்குளிரான தண்ணீரின் வெள்ளமாகிய கல்லறையை விட்டு அவர்கள் எழும்புவார்களாக. ஏதோவொரு நாளில், அவர்கள் கல்லறையில் இளைப்பாற செல்வார்களானால் இந்த மண் பூமி வெடித்து, கல்லறையின் மேல் மூடப்படும் கல் புரட்டித் தள்ளப்படுவதாக. அவர்கள் இந்த எல்லாவற்றையும் செய்யக்கூடிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் அந்த இராஜ்ஜியத்தில் தங்களுடைய அன்பார்ந்தவர்களுடன் மீண்டும் ஒன்று கூடட்டும், கர்த்தாவே. ஒவ்வொருவரும் ஒரு முழு நினைவாற்ற லோடும், அவர்கள் செய்துகொண்டிருப்பதைக் குறித்த முழு நம்பிக்கையோடும் இப்பொழுது முன்னோக்கி அசைந்து சென்று, இந்த செய்தி உண்மையென்று விசுவாசிப்பார்களாக. அவர் - விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவதில்லை. நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்“ என்றார். இங்கே அவர்களுடைய விசுவாசமும் சாட்சியும் உள்ளது. கர்த்தாவே, இந்த சபையின் ஐக்கியத்திற்குள் அவர்களை ஞானஸ்நானம் பண்ணுகிறேன், கர்த்தாவே, பரிசுத்த ஆவியால் உம்முடைய பிரியமான குமாரனின் ஐக்கியத்திற்குள் அவர்களை ஞனாஸ்நானம் பண்ணும், நாங்கள் இதை கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென். நீங்கள் உங்களுடைய அறைக்குள் செல்கிற வேளையில் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்) கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், உங்கள் விசுவாசத்தை அறிக்கையிட்டு, இயேசு மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்று இந்தக் காலையில் விசுவாசித்தவர்களாக செல்லுங்கள்... தேவன் அவரை ஆசீர்வதித்து, மரித்துக்கொண்டிருக்கும் ஒரு தேசத்திற்கு இந்த ஜீவ வார்த்தையைக் கொண்டு செல்ல, அவரை ஒரு போதகராக ஆக்குவாராக. நாம் அவர்களுடைய தலைகளை வணங்குவோமாக. ஓ பரலோக பிதாவே, இரக்கமாயிரும், அன்புள்ள பிதாவே. இங்கே நின்றுகொண்டிருக்கும் இந்த சிறு ஏழைப்பையனை நோக்கிப் பாரும். கர்த்தாவே, அது கூடுமா என்பது எங்களுக்குத் தெரியாது. கர்த்தாவே, கூடுமானால், அங்கே அந்த தேசத்திலிருக்கும் அவனுடைய தாய், தன்னுடைய அன்பான பையன் இப்பொழுது கர்த்தராகிய இயேசுவிடம் திரும்பினதை இந்த காலையில் அறிந்துகொள்ளட்டும். ஏதோவொரு நாளில் இந்த மாம்ச சரீரம் அவனுடைய மேல்பாகத்தை விட்டு புறப்பட்டு போய்விடும் என்றும் அவள் முன்கூட்டியே உயிர்த்தெழுந்து வருவாள் என்றும் அறிந்து ஒரு பழைய கடுங்குளிரான (தண்ணீரான) கல்லறைக்குள் போவானாக. கர்த்தாவே, தேவன் அவனை ஆசீர்வதித்து, அவனை ஒரு மகத்தான மனிதனாக ஆக்கி, அவன் உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தட்டும். இப்பொழுது. நீர் ஏதோவொரு நாளில் அவனை அழைத்தீர் என்பதை நான் அறிவேன், கர்த்தாவே. ஓ, நீர் அவனுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். உமக்குச் சித்தமானால் அவனை ஒரு ஊழியக்காரனாகவும் வார்த்தையை பிரசங்கிப்பவனாகவும் ஆக்கும். கர்த்தாவே, உலகமெங்கும் சென்று சகல தேசத்தாரையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுங்கள் என்று நீர் எங்களுக்கு கொடுத்த பொறுப்பின் படி, என் ஜெபத்தைக் கேளும். என்னுடைய அன்பான சகோதரனே, உன்னுடைய விசுவாச அறிக்கையின் பேரிலும், தேவனுடைய குமாரனில் உன் விசுவாசத்தின் பேரிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உன்னை ஞானஸ்நானம் பண்ணுகிறேன். ஆமென். 5(ஜனங்கள், அவர் என்னை எங்கு நடத்தினாலும் நான் பின்செல்வேன்'' என்ற பாடலை பாடுகின்றனர். சகோதரன் பிரான்ஹாம் பாடலின் போது பேசுகிறார் - ஆசிரியர்) கர்த்தருக்கு ஸ்தோத்திரம்... ஒவ்வொருவருக்கும் சகோதரனைத் தெரியும்... அது எப்படியென்று நான் அறிவேன்... அதோ அங்கே ஒரு குடும்பம் பின்னால் உள்ளது, இது உம்முடைய ஜெபத்திற்கான பதிலாகும். இங்கே தேவனுடைய... ஒருவர் இருக்கிறார்... எனக்கு ஒரு தகப்பனைப் போன்றுள்ள ஒரு மனிதர் இங்கே இருக்கிறார். நான் அனேக தடவைகள் ஆர்வமின்றி அவருடைய உதவிகளை மறுத்துவிட்டிருக்கிறேன். அது சரியே. நான் அவருடைய உதவியை மறுத்திருந்தாலும் அல்லது நான் என்ன செய்திருந்தாலும் ஒரு பொருட்டல்ல, அவர் அப்படியே என்னுடைய தோழனாக இருந்தார். அதுவே ஒரு உண்மையான நண்பர். அது ஒரு காய்ந்த சீதோஷ்ண நிலையிலான நண்பர் அல்ல; சரியோ அல்லது தவறோ எதுவாயிருந்தாலும் உங்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு நண்பர். நான் இந்தக் காலையில் சகோதரன் நெல்சனுக்காக மகிழ்ச்சியடைகிறேன். அவர் இந்த நாளில் தெரிந்து கொள்ளப்பட்டதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். நான்... அவர் அதை செய்வார் என்பதை நான் அறிவேன், ஆனால் அவர் இந்த நாளில் உயிர்த்தெழுதலை தெரிந்துகொண்டு, இயேசுவை தம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவருடைய உயிர்த்தெழுதலை விசுவாசித்து, இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலை அவர் விசுவாசிக்கிறார் என்பதை இந்த காலையில் ஜனங்கள் முன்னிலையில் சாட்சி கூறிக்கொண்டிருக்கிறார், அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு இப்பொழுது ஞானஸ்நானம் பெறும்படி வெளியே நின்று கொண்டிருப்பார் என்பது எனக்குத் தெரியாது. என் அன்புள்ள சகோதரன்.மாக், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் அவரை பரிசுத்த ஆவியால் நிரப்ப வேண்டுமென நான் ஜெபிக்கிறேன். அவருடைய ஸ்தானமானது அப்படியே ஊழியக்காரர்களுக்கான மாறாத ஸ்தானமாக உள்ளது. ஏதாவது... ஊழியக்காரர்கள் வந்து அவர் கொண்டிருக்கும் காரியத்தில் சற்று உதவி செய்யுங்கள். அவரும், அவருடைய மனைவியும், பிள்ளைகளும் நல்ல இருதயமுடையவர்களாயும் நல்ல மனப்பண்பு கொண்டவர் களாகவும் உள்ளனர். தேவன் இப்பொழுது இன்னும் அபரிமிதமாக ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நாம் இப்பொழுது ஜெபிக்கிற வேளையில், நீங்கள் உங்களது தலையை தாழ்த்துங்கள். நீங்கள் சரியாக இந்த வழியாக சுற்றிலும் திரும்பி... சர்வ வல்லமையுள்ள தேவனே, இந்த மனிதர் செய்துள்ள பெருந்தன்மையுள்ள செயல் வேறெங்கும் இருக்க முடியாது, ஆனால் நீர் அதைப்பற்றி அறிந்திருக்கிறீர். நீர் அவையெல்லாவற்றையும் முழுவதுமாக குறித்துவைத்துள்ளீர். ஆனால் அவர் தன்னுடைய ஜீவியத்தில் எப்பொழுதும் செய்ததிலேயே மிகப்பெரிய செயலும், மகத்தான காரியமும் என்னவென்றால் உம்முடைய நேச குமாரனை தம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டிருப்பது தான். இந்தக் கூட்டத்தினர் முன்பாக ஒரு அறிக்கையை செய்யவும், தண்ணீரில் ஞானஸ்நானம் பெறுவதைக் குறித்து சாட்சி கூறவும், இந்த ஈஸ்டர் சங்கதி உண்மையென்று விசுவாசிப்பதற்கும் இங்கே நடந்து வருபவர்களுக்காக ஜெபிக்கும் ஒவ்வொருவரின் ஜெபத்தையும், அவருடைய அன்பான மனைவி மற்றும் பிள்ளைகளின் ஜெபத்தையும் கேளும். 6சர்வவல்லமையுள்ள தேவனே, பரிசுத்த ஆவியால் அவரை நிரப்பும். வரப்போகும் உலகத்திலும் ஒரு நீண்ட சந்தோஷமான ஜீவியத்தையும், இயேசு கிறிஸ்து மூலமாக நித்திய ஜீவனையும் அவருக்குக் கொடும். ஓ, இயேசுவே, இருக்க வேண்டிய வழியை எங்களுக்குப் போதிக்கும் தேவகுமாரனே... நீங்கள் உலகமெங்கும் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள் என்றீர்... என் அன்புள்ள சகோதரனே, உங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டதன் பேரிலும், தேவனுடைய குமாரனில் உள்ள உங்கள் விசுவாசத்தின் பேரிலும், நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை ஞானஸ்நானம் பண்ணுகிறேன். ஆமென். (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசிரியர்) இப்பொழுது, இங்கேயுள்ள சகோதரன் பில்லியை தேவன் முழுவதுமாக பரிசுத்த ஆவியால் நிரப்ப வேண்டுமென்று நாமெல்லாரும் ஜெபித்துக் கொண்டிருக் கிறோம். நான் அவனை சகோதரன் பில்லி என்று அழைக்கிறேன், ஏனெனில் நண்பர்களே, நாங்கள் சொந்த சிநேகிதர்களாக இருக்கிறோம். இப்பொழுது உங்கள் கரங்களை, சற்று உங்கள் சரீரத்தை சுற்றிலும் வையுங்கள். 7பரலோக பிதாவே, இப்பொழுது அப்படியே இந்தக் காட்சியை நோக்கிப் பாரும். எங்கள் சகோதரன் ஜாசன் இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்தை அறிக்கையிட்டு, மரணம் அடக்கம் உயிர்த்தெழுதலை விசுவாசித்து இங்கே நின்றுகொண்டிருக்கிறார். எங்களுடைய இடத்தில் மரித்து, எங்களுடைய இரட்சகரை அப்பால் எடுத்துச் சென்ற மரணத்தை பிரதிநிதித் துவப்படுத்தும்படி இங்கே மிகக்குளிரான தண்ணீரில் நின்றுகொண்டிருக்கிறார். அவருடைய மரணம் அடக்கம் உயிர்த்தெழுதலின் ஒரு ஞாபகார்த்தமாகவும், அவரை சேவிக்க புது ஜீவனுக்கு எழும்பவும் நாங்கள் போய்க் கொண்டிருக்கிறோம். சர்வ வல்லமையுள்ள தேவனே, என்னுடைய சகோதரனை ஆசீர்வதியும்; அவருடைய தாலந்துகளை ஆசீர்வதியும், கர்த்தாவே, உமக்காக ஒரு மகத்தான மனிதராக அவரை ஆக்கும். உம்முடைய ஊழியக்காரனின் ஜெபத்தை கேளும். கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் உலகமெங்கும் சென்று, சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று எங்களிடம் ஒப்புவித்தபடி, என் அன்புள்ள சகோதரனே, பாவத்தின் அறிக்கையின் பேரிலும் தேவனுடைய குமாரனில் உங்களுடைய விசுவாசத்தின் பேரிலும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களை ஞானஸ்நானம் பண்ணுகிறேன். ஆமென். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்) இது என்னுடைய ஜீவியத்தினுடைய மகத்தான தருணங்களில் ஒன்று. என் தாயே, யாரோ ஒருவருடைய தோளின் ஊடாக நோக்கிப் பார்த்தீர்கள். நான் அவளை இங்கே வெளியே ஓஹியோ ஆற்றுக்கு நடத்திச் சென்று அவளுக்கு கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தேன். 8இப்பொழுது, என்னுடைய சொந்த பையன். ஓ, தேவனே, கூடுமானால் ஹோப் பூமிக்கும் மகிமைக்கும் இடையே தொங்கிக்கொண்டு, திரையினூடாக நோக்கி, படிக்கட்டின் கைப்பிடி கம்பியினூடாக இந்தக் காலையில் கீழே நோக்கிப் பார்க்க அனுமதியும். தேவனே, என்னுடைய மகன் ஒரு போதகராக ஆக வேண்டுமென நான் ஜெபிக்கிறேன். தேவன் அவனை அபிஷேகித்து, இரண்டு மடங்கு ஆவியை அவனுக்கு அருள் வேண்டுமென நான் ஜெபிக்கிறேன். தேவன் அவனுடைய ஜீவியத்தை ஆசீர்வதிப்பாராக. உங்களுடைய ஜெபத்திற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி. ஜெபம் காரியங்களை மாற்றுகிறது. நான் உங்களுடைய பிள்ளைகளுக்காக அதிகமாக ஜெபிப்பேன். பில்லி பையனே, இயேசு வரத் தாமதிக்குமானால், தேனே, இந்த ஏதோவொரு நாளில், நாம் செல்ல வேண்டியவர் களாயிருக்கிறோம், அவர்கள் நம் மீது தூசியை எறிவார்கள். ஆனால் மகனே, தேவன் நம்மை மேலே கொண்டு வருவார். - என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.“ தேவன் அவனை ஆசீர்வதித்து, சத்துருவிடமிருந்து அவனை காக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். அங்கே அனேக ஆத்துமாக்கள் மரித்துக் கொண்டிருக்கின்றனர். மகனே, இந்த நீண்ட பாதையில், அவர்களை அவனிடமிருந்து விடுவி. ஜீவ கயிறை அவர்களிடம் எறிந்து அவர்களை மேலே கொண்டு வா. தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டதற்காக ஆயிரமாயிரம் பேர் சாட்சி கூறி, நீ நின்று அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பாய் என்று நான் நம்புகிறேன். என் பையனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, நான் ஜெபிக்கிறேன்... ஓ எஜமானரே, ஓ, எப்படியாக நான்... கர்த்தாவே, என் பையனை உமக்காக நான் உயர்த்தியிருக்கிறேன். கர்த்தாவே, இங்கே என்னுடைய பையன் இருக்கிறான். நான் பெற்றிருப்பதெல்லாம் அவன் தான். நான் இந்தக் காலையில் அவனை உம்மிடம் கொண்டுவருகிறேன். அவன் இதை விசுவாசிப்பதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். தேவனே, அவன் பாவத்திற்காக மனஸ்தாபப்படுவதற்காக நன்றி. ஓ கர்த்தராகிய இயேசுவே, ஓ கிறிஸ்துவே, அவனை பரிசுத்த ஆவியினால் அபிஷேகியும். கர்த்தாவே, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஆவியின் வல்லமையை அருளும். என் பையனை பரிசுத்தப்படுத்தம். இதை அருளும், கர்த்தாவே. கிறிஸ்துவின் கலப்படமற்ற சுவிஷேமாகிய வார்த்தையை உலகம் முழுவதும் சென்று பிரசங்கிக்க தேவனுடைய ஆவியினால் அவனை நிரப்பும், கர்த்தாவே. இதை அருளும், கர்த்தாவே, அவனை ஆசீர்வதித்து, அவனை பயன்படுத்தும். கர்த்தாவே, அவன் தனக்கு முன்பாக கல்லறையை கொண்டவனாக நின்றுகொண்டிருக்கிறான். அவனுடைய தாயும் சகோதரியும் அங்கே படுத்துக்கொண்டிருப்பது போல நாங்களும் அங்கே போய்க்கொண்டிருக்கிறோம், அதோ அங்கேயுள்ள அந்த காலை நேரத்தைக் குறித்து நான் எண்ணுகிறேன். ஒ கிறிஸ்துவே, இது பரலோகத்தில் பதிவு செய்யப்படும். தேவனே, இரக்கமாயிரும் என் மகனுடைய ஜீவிய காலத்தில் வீட்டிற்கு செல்லும் அவனுடைய பிரயாணம் முழுவதும் அவனுக்கு விசுவாசத்தை அருளும், இந்த ஜீவியத்தில் அவனை ஆசீர்வதியும், கர்த்தாவே, அவனை ஆசீர்வதியும். ஆத்துமாக்களை இரட்சிக்கப்பண்ணும் ஒரு மகத்தான ஊழியத்தை அவன் கொண்டிருப்பானாக. கர்த்தாவே, அவன் இங்கே இருக்கிறான். உலகமெங்கும் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டுமென்று உம்முடைய ஊழியக்காரனுக்கு ஒப்புவித்த பிரகாரம், கர்த்தாவே, இந்தக்கட்டளையின் பிரகாரம், என்னே, என் இருதயம் உமக்காக இரத்தம் சொரிகிறது. என் மகனே, உன்னுடைய பாவங்களை அறிக்கையிடு வதின் பேரிலும், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில் உன்னுடைய விசுவாசத்தை அறிக்கையிடு வதின் பேரிலும், என் நேச குமாரனே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உன்னை ஞானஸ்நானம் பண்ணுகிறேன். ஆமென். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்)